×

கரூர் சம்பவத்துக்கு முழுக்க முழுக்க திமுக அரசே காரணம்- நயினார் நாகேந்திரன்

 

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் இன்று தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “எதிர்க்கட்சிகள் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்பதே ஆளுங்கட்சியின் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் கரூரில் அவர்கள் கேட்ட இடத்திற்கு மாற்றாக வேறு இடம் கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மோசமான சூழ்நிலைக்கு, முழுக்க முழுக்க திமுக அரசே காரணம். இன்று முதல் கவுண்ட் டவுன் தொடங்குகிறது. தேஜ கூட்டணி ஆட்சியமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்து, சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனர். இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடி பறந்தது என்பது. தொண்டர்களால் சேர்வது தான் இயற்கையான கூட்டணி” என்றார்.