×

#BIG BREAKING : நாளை சென்னை , திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

 

சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (28.10.2025) விடுமுறை.
தொடர் மழையை அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக சென்னையில் இன்று தொடர் மழை பெய்து வருகிறது. மோன்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அண்டை 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை ஏற்படக்கூடும்


இதனால், சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு (அக்.28) விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.