×

இறுதிச்சடங்கு ஊர்வலத்தின்போது பாக்., ராணுவம் சுட்டதில் 27 பேர் பலி..!!

 

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பு அடக்குமுறைக்கு எதிராக, கடந்த சில வாரங்களாகவே போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ராவலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு ஊர்வலம், ராவலகோட்டில் நேற்று நடைபெற்றது. இதில், போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அவாமி அதிரடிக்குழுவின் தலைவர்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, ராணுவத்திற்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.

இதனால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், கூட்டத்தினர் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூட்டு அவாமி அதிரடிக்குழு கூறியுள்ளது.