தவெகவில் தொகுதி வாரியாக வழக்கறிஞர்கள் நியமனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர்கள் அணியின் மாநில நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தவெகவிற்கு 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் 10 மாநில நிர்வாகிகள் (வழக்கறிஞர் அணி) மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ் வழக்கறிஞர்கள் அணியின் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செயல்படுவார்கள். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நீதிமன்றந்தோறும் தங்கள் கட்சிக்கு வழக்கறிஞர்கள் குழுவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தொகுதி வாரியாகவும் கட்சிக்கு வழக்கறிஞர்களை நியமிக்கவுள்ளனர்.
கட்சியினர் மீது பதியப்படும் வழக்குகளை கையாளவும், அவர்களுக்கு உதவி செய்யவும், கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறவும், சமூகப் பிரச்னைக்கு வாதாடவும் இந்தக் குழுக்கள் செயல்படும். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவை அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.