"முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும்" - மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மாமாவும், முரசொலி பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியருமான மறைந்த முரசொலி செல்வம் படத்திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். முரசொலி செல்வம் மறைவுக்குப் பிறகு என் மனது உடைந்து சுக்குநூறாகிவிட்டது. முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. தொண்டையை அடைக்கிறது. மறைவு செய்தி கேட்டு அதிர்ந்துவிட்டேன். எங்களுக்கெல்லாம் அவர் மூத்த சகோதரனாக இருந்தவர். திமுக இளைஞரணி உருவாகியபோது எனக்கு துணை நின்று ஊக்கப்படுத்தியவர். நான் பங்கேற்கும் திமுக தேர்தல் பரப்புரை கூட்டங்களை பார்த்துவிட்டு அறிவுரை கூறுவார். விளையாடும் வயதில் முரசொலி நாளிதழில் வேலை செய்தோம்.
முரசொலி செல்வம் எங்களை எல்லாம் சோகத்தில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர். மறைவதற்கு முன்பு கூட முரசொலி செல்வம் என்னிடமும் பேசினார்” என உருக்கமாக பேசினார்.
*