எப்படி நோயின்றி ஆரோக்கியமாய் எடை குறைத்து வாழலாம் தெரியுமா ?
பொதுவாக நாம் அனைவரும் நோயின்றி வாழவே ஆசைப்படுகிறோம் .ஆனால் அதற்கான முயற்சியை எடுக்கிறோமா என்று கேட்டால் இல்லையென்றுதான் கூற வேண்டும் ,இதற்கு காரணம் காலையில் தினம் வாக்கிங்கை மேற்கொள்வோர் சொற்ப அளவு மனிதர்கள்தான் ,எனவே எப்படி நோயின்றி ஆரோக்கியமாய் எடை குறைத்து வாழலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக இஞ்சி செரிமானத்திற்கு ஏற்றது என்று நாம் அறிந்ததே. .
2.ஒரு லிட்டர் தண்ணீரில் உலர் இஞ்சியை போட வேண்டும். பின்பு அதை கொதிக்க விட வேண்டும். அந்த நீர் ஆறிய பின்பு அந்த நீரை எடுத்துக் குடிக்க வேண்டும்.
3.இந்த இஞ்சி நீர் நம் உடலின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
4.இந்த இஞ்சி நீர் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
5.இந்த இஞ்சி நீர் குடிப்பது சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கிறது
6.இந்த இஞ்சி நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
7.இந்த இஞ்சி நீர் குடிப்பது வீக்கம், வாயு மற்றும் வயிற்று வலியைக் குறைக்கிறது..
8.அடுத்து காலையில் எழுந்து நாம் வாக்கிங்க் சென்றாலே உடலில் பல நோய்கள் சரியாகிவிடும்.
9.காலை மாலை வாக்கிங் போவது ஆரோக்கியமான எடையை பராமரிக்கஉதவும் ,
10.காலை மாலை வாக்கிங் போவது உடல் கொழுப்பை குறைக்கவும், இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களை வராமல் தடுக்கிறது .
11.அடுத்து நோயின்றி வாழ ஒரு நாளில் 8-10 மணி நேரம் உணவு உண்ணலாம். 14-16 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கலாம்.