கிட்னி ஆரோக்கியமாயிருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் பருகுவது அவசியம் தெரியுமா ?.
பொதுவாக நம் உடலில் கிட்னி மிக முக்கியமான உறுப்பு .இது செயலிழந்து விட்டால் முதலில் டயாலிசிஸ் செய்வார்கள் .பின்னர் கிட்னி மாற்று சிகிச்சை செய்யப்படும் .நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மையை இழப்பது ஆகும் .இந்த கிட்னியைப் பாதுகாக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம்
1.பொதுவாக கோடைக்காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறும். அப்போது உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும்
2.மேலும் முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் காயம் ஏற்பட்டு ஆரோக்கிய குறைவு உண்டாகும்
3.கிட்னி ஆரோக்கியமாயிருக்க ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 12 தம்ளர் நீர் பருகுவது அவசியம்.
4.கிட்னி ஆரோக்கியமாயிருக்க நீர்ச்சத்து அதிகமான வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுவதும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிக்கும்.
5. மேலும் அளவுக்கு அதிகமான உப்பை நாம் சேர்த்தால் இரத்த அழுத்தம் அதிகரித்து கிட்னியை பாதிக்கும் க்கும்.