சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது இந்த பயறு
பொதுவாக சர்க்கரை நோயும் ,ரத்த கொதிப்பு நோயும் வராமல் நம்மை காப்பது சிறு பயறு .இந்த சிறு பயரால் நம் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிறு பயிறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக மெதுவாகவே அதிகரிக்கும்.
2.இந்த சிறு பயறு இரத்தத்தின் சர்க்கரையை அதிகரிக்கும் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ)38 என்ற அளவு கொண்டது.
3.இந்த சிறுபயரில் அதிகமாக காணப்படும் நார்ச்சத்து, மெக்னீசியம், புரதம் ஆகியவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும் .
4. பொதுவாக முதுமையில் பெரும்பான்மையோரை பாதிப்பது உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்தக் கொதிப்பாகும்.
5.இந்த ரத்த கொதிப்பு நமக்கு இதய நோய் வரக்கூடிய ஆபத்தையும் உருவாக்குகிறது.
6.சிறு பயிறு சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் குறைகிறது.
7.பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவான சிறுபயிறு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கிறது..
8.இந்த சிறு பயரில் அதிக வைட்டமின் உள்ளது.
9.இந்த சிறு பயறு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும்.
10.சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது சிறு பயறு.
11.உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், இந்த பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.