சிறு தானியங்கள் எந்தெந்த நோய்களை தடுக்கும் தெரியுமா ?
பொதுவாக நாம் சமையலுக்கு அரிசி கோதுமையை தவிர்த்து சிறு தானியங்களை நாம் அதிகம் பயன் படுத்தினால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1. அரிசி மற்றும் கோதுமைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் மற்ற தானியங்களுக்குக் கொடுப்பதில்லை ..
2.ஆனால் சிறுதானியங்களே நமக்கு அதிக நன்மை செய்கிறவையாகும்.
3.கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு ஆகியவை சிறுதானியங்களாகும்.
4.இந்த சிறு தானியங்களில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இவற்றில் அதிகம் காணப்படுகிறது.
5.இந்த சிறு தானியங்கள் செரிமான மண்டலத்திலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு உதவுகின்றன.
6.ஆகவே இந்த சிறு தானியங்கள் மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்கிறது.
7.இந்த சிறு தானியங்கள் மட்டு மல்லாமல் மசாலா பொருள்கள் மஞ்சள், இலவங்க பட்டை, வெந்தயம், கறுப்பு மிளகு போன்ற மசாலா பொருள்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை.
8.இந்த மசாலா பொருளில் அழற்சிக்கு எதிராக செயல்படும் திறன் உள்ளது.
9.இந்த மசாலா பொருள்கள் பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் இவை வேலை செய்கின்றன.
10.இந்த மசாலா பொருள்களில் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களும் இவற்றில் உள்ளன.
11.இந்த மசாலா பொருள்கள் அழற்சியை குறைப்பதோடு, காயங்களையும் ஆற்றுகின்றன.
12.இந்த மசாலா பொருள்கள் உடலுக்கு நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்களால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துகின்றன..