×

பப்பாளியை அடிக்கடி உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக பப்பாளி பழம் எல்லா காலத்திலும் நமக்கு கிடைக்க கூடிய பழமாகும் .இது மிக இனிப்பு சுவை கொண்டது ஆகும் .இந்த பழத்தினை உண்டு வந்தால் சிறுநீர் பையில் உண்டாகும் கல்லை கரைக்கும் ,மேலும் நம் நரம்புகள் பலப்படும் ,அது மட்டுமல்லாமல் நம் பற்களுக்கும் வலிமை தரும் ஆற்றல் கொண்டது .இந்த பப்பாளியின் மற்ற நன்மைகளை இந்த ப்பதிவில் பார்க்கலாம் 
 

1.பப்பாளி பழத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுகிறது. இது ஏனைய பழங்களை விட குறைவு ஆகும் 
2.இந்த சர்க்கரை குறைவால்  சர்க்கரை நோய் உள்ளவர்கள் பப்பாளி பழத்தை உண்பதில் எந்த வித தடையும் இல்லை. 
3.இதில் உள்ள விட்டமின் சத்து இன்சுலின் அளவை சீர் செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. 
4. நம் உண்ட உணவு செரிமானம் ஆகா வேண்டும் .இது செரிமானம் ஆகாவிட்டால் உடலில் பெரிய ஆபத்து ஏற்படுத்தும். 
5.அதனால் பப்பாளியில் உள்ள நார்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. 
6.மேலும் எண்ணெயில் தயாரித்த உணவை முற்றிலும் குறைத்து கொள்ள வேண்டும். 
7.நம் உடலில் ஜங்க் ஃபுட் தான் உடலில் நடக்கின்ற செரிமானத்தை தடுக்கிறது.ஆகவே ஜங்க் ஃபுட் மற்றும் எண்ணெய் பொருள்ககளை குறைத்து கொள்ள வேண்டும் .
8. நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் பப்பாளியை அடிக்கடி உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும் . 
9.இந்த பப்பாளி  பசியை கட்டுப்படுத்தி உடம்பில் உள்ள தேவையற்ற கலோரிகளை அழிக்கிறது. 
10.சில பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயால் பயங்கரமான வயிற்று வலி ஏற்படும். 
11.அந்த வயிற்று வலியை பப்பாளியில்  உள்ள பாப்பேன் என்ற சத்து இரத்த ஓட்டத்தை எளிமைப்படுத்தி வயிற்று வலியை குறைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது .