முடக்கத்தான் கீரை எந்தெந்த நோயை காலி செய்யும் தெரியுமா ?
பொதுவாக முடக்கத்தான் கீரையில் எண்ணற்ற மருத்துவ பண்புகளை பெற்றுள்ளது. முடக்கத்தான் கீரை சூப் வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால் நிச்சயமாக மூட்டுவலி மற்றும் பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
சரி இந்த பதிவில் மூட்டு வலியை போக்க முடக்கத்தான் கீரை சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம் -
1.முதலில் முடக்கத்தான் கீரை - 200 கிராம் எடுத்து கொள்வோம் .அதனுடன் சீரகமும் எடுத்து கொள்வோம்
2.அடுத்து சாம்பார் வெங்காயம் - 10 எண்ணிக்கையும் அதனுடன் கறிவேப்பிலையும் எடுத்து கொள்வோம்
3.அடுத்து கொத்தமல்லி யும் மிளகும் எடுத்து கொள்வோம்
4.அடுத்து தக்காளி - 2 எண்ணிக்கையும் ,பூண்டு 10 பல்லும் எடுத்து கொள்வோம் .இப்போது முடக்கத்தான் கீரை சூப் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்
5.முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து, காம்புகளுடன் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
7.அந்த கொதிக்கும் நீரில் முடக்கத்தான் கீரை, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
8.இந்த கலவையை நன்றாக கொதிக்கவிட்டு, அதன் பின்பு வடிக்கட்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டால் முடக்கத்தான் கீரை சூப் ரெடி.
9.இந்த முடக்கத்தான் கீரை சூப்பை வாரத்திற்கு இரு முறை இந்த சூப்பை குடித்து வந்தால் முடக்கு வாதம்குணமாகும் ,
10.இந்த முடக்கத்தான் கீரை சூப் மூலம் நரம்பு தளர்ச்சி போன்றவற்றிலிருந்து விடுபடலாம். .