×

சுக்கை பற்றாக தலையில் போட்டால்  நம் உடலில் நேரும் அதிசயம்

 

பொதுவாக இஞ்சி காய்ந்தால் வருவது சுக்கு .இந்த சுக்கு ஆங்கில மருந்துகளுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது என்றால் அது மிகையாகாது . 
, சுக்கு சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1.சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனை உண்டாகும் .இந்த பிரச்சினைகளுக்கும், சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுக்கே சிறந்த தீர்வாகிறது.
2.சுக்கு சாப்பிடுவதால் வாந்தியை நிறுத்துவதுடன், வாயுவை கட்டுப்படுத்தகூடியது, 
3.சுக்கு சாப்பிடுவதால்  நெஞ்சு சளியை கரைத்து அதை வெளியேற்றும்.
4. சுக்கை அப்படியே மென்று அதன் சாற்றை மட்டும் விழுங்கினால் தொண்டைக்கட்டு சரியாகும்.
5.சுக்கு மற்றும் அதிமதுரத்தை பொடி செய்து எடுத்து கொள்வோம் .பின்னர் அதில்  1 கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் சரியாகும்.
6.ஆரோக்கியம் மிகுந்த சுக்கை பற்றாக தலையில் போட்டால் தலைவலி பறந்தோடும், 
7.ஆரோக்கியம் மிகுந்த சுக்கை மூட்டின் மீது தடவினால் மூட்டு வலி சரியாகும்.
8.1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து வைக்க வேண்டும், 
9.நீர் ஆறிய பின்னர் தேன் அல்லது சர்க்கரை கலந்து பருகி வர வயிறு பிரச்சனைகள் சரியாகும்.
10. அடுத்து பூண்டுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று நோய் இருக்குமிடம் தெரியாமல் மறையும் , 
11.ஆரோக்கியமான சுக்குடன் தேனும் எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால் உடல் பலம் தரும்.