×

கள்ளக்காதலனால் சீரழிந்த வாழ்க்கை! கணவன், மனைவி தற்கொலை- அனாதையான 3 வயது சிறுவன்

 

எலுரு மாவட்டம் பீமடோலு  பகுதியில் கணவன், மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பீமடோலுவைச் சேர்ந்த குண்டுமொலு பானுபூர்ணிமா (22) காதலித்து அதேபகுதியை சேர்ந்த  சுதாகரை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் உள்ளார். இந்தநிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கட்டாரி மோகன் என்பவர் பானு பூர்ணிமா ஒரு திருமண நிகழ்ச்சி மூலம் அறிமுகமாக   போனில் பேச தொடங்கி 15 நாட்களுக்கு முன்பு கட்டாரி மோகன் அழைத்ததன் பெயரில் அவருடன் பைக்கில் சென்றார். மனைவி வீட்டில் இல்லாமல் எங்கு சென்றார் என்று தெரியாமல் கணவர் சுதாகர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 19ம் தேதி கட்டாரி மோகன் பைக்கில் அழைத்து வந்து பூர்ணிமாவை இறக்கி விட்டார். வீட்டிற்கு வந்த பூர்ணிமா தன்னை என்ன செய்தான் என்ற சுயநினைவே தனக்கு இல்லை, நான் எப்படி அவருடன் சென்றேன் என தெரியவில்லை. கட்டாரி மோகன் என்னை எப்படியோ வசப்படுத்தி அழைத்து சென்றுவிட்டான், நினைவு திரும்பிய பின்னர் எவ்வளவு வற்புறுத்தியும் தன்னை விடவில்லை என்று கூறினார். 

பூர்ணிமா வீட்டிற்கு வந்த பிறகு  ​​மோகன் என்ற ஆண் தங்கள் வாழ்க்கையில் நுழைந்ததால் கிராமத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொருவிதமாக பேசி வந்ததால் மன அழுத்தம் அடைந்த  தம்பதியினர், கடந்த திங்கிட்கிழமை வீடியோ எடுத்து மகிழ்ச்சியாக இருந்த தங்கள் வாழ்க்கையில் மோகம் குறுக்கிட்டதால் என்ன நடந்தது என்று தெரியாமல் வாழ முடியாமல் இருவரும் சாகிறோம் என பேசி நண்பர்களுக்கு அனுப்பினர். உடனடியாக வீடியோ பார்த்த அவரது நண்பர்கள் தம்பதி  இருந்த இடத்திற்கு வந்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும்  திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி பூர்ணிமா இறந்தார். இன்று அதிகாலை கணவர் சுதாகர் இறந்தார். பானு பூர்ணிமா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பீமடோலு போலீசார் வழக்கு பதிவு செய்து  மரணத்திற்கு காரணமான கட்டரி மோகனை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவன், மனைவி தற்கொலையால் 3 வயது மகன் நிற்கதியாய் தனித்துவிடப்பட்டான்.