கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி
தெலங்கானாவில் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு தடையாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரைத் கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி நாராயண்கேட் மண்டலத்தின் கங்காபூர் கிராமத்தைச் சேர்ந்த முத்யம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாராயண்கேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் கல்பனா, சிண்டு என்ற நபருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்தார். இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் வீட்டில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இதனால் காதலன் உதவியுடன் கணவரை கொலை செய்ய திட்டம் வகுத்தார்.
இதற்காக கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு, கல்பனா தனது காதலனுடன் சேர்ந்து முத்யம் ரெட்டியை மானூர் மண்டலத்திலுள்ள எல்கோய் கிராமத்தின் புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாகக் அடித்து கொலை செய்தார். ஜெ.சி.பி. கொண்டு யாருக்கும் தெரியாமல் இருக்க அதே பகுதியில் குழி தோண்டி அங்கு உடலைப் புதைத்தனர். பின்னர் யாருக்கும் தெரியாதது போல் முத்யம் ரெட்டி கணவர் காணாமல் போனதாக கல்பனா புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் கல்பனாவின் நடத்தையை விசாரித்தபோது அவர் திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பதை அறிந்து அவரை பிடித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை சென்ற போலீசார் புதைக்கப்பட்டிருந்த உடலை வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி கல்பனா அவரது காதலன் சிண்டுவை கைது செய்தனர். திருமணத்திற்கு புறம்பான உறவால் ஒரு தந்தை இறந்த நிலையில் தாய் கைது செய்யப்பட்டதால் அவர்களின் இரண்டு பிள்ளைகள் அனாதைகளாக மாறினார். அவர்களை பாட்டி வீட்டில் போலீசார் ஒப்படைத்தனர்.