கொரோனா தொற்று : அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்!

 

கொரோனா தொற்று : அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்!

முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து வெளியேறியவர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல். இவர் தற்போது அமமுக பொருளாளராக உள்ளார்.

கொரோனா தொற்று : அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்!

கட்சி பணிகளை தீவிரமாக செய்து வந்த இவருக்கு காய்ச்சல், சளித் தொல்லை இருந்துள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து வெற்றிவேல் கடந்த 6-ஆம் தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்று : அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்!

இந்நிலையில் வெற்றிவேலுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது உடல்நிலை , மோசமாகி உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.