‘ஓபிஎஸ் மகன் கார் மீது தாக்குதல்’.. அமமுக தொண்டர்கள் போராட்டம்!

 

‘ஓபிஎஸ் மகன் கார் மீது தாக்குதல்’.. அமமுக தொண்டர்கள் போராட்டம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது ஜனநாயக கடமையை சிறப்பாக செய்து முடித்தனர். அந்த வகையில், துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத், பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, அவரது கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். திமுகவினர் தான் காரை சேதப்படுத்தியதாக ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டினார்.

‘ஓபிஎஸ் மகன் கார் மீது தாக்குதல்’.. அமமுக தொண்டர்கள் போராட்டம்!

இது தொடர்பாக ரவீந்திரநாத்தின் டிரைவர், பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ரவீந்திரநாத்தை கொலை செய்ய வந்த கும்பல் தன்னை தாக்கிவிட்டு காரையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், மாயி என்ற அமமுக பிரமுகரும் ஒருவர். அவரை போலீசார் கைது செய்தனர்.

‘ஓபிஎஸ் மகன் கார் மீது தாக்குதல்’.. அமமுக தொண்டர்கள் போராட்டம்!

மாயியை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, அமமுகவினர் பெருமாள் கவுண்டன்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மாயியை விடுதலை செய்ய வேண்டும் என்றும் எதிர்தரப்பில் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.