சசிகலாவை தரக்குறைவாக பேசுவதா? நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு

 

சசிகலாவை தரக்குறைவாக பேசுவதா? நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு

சசிகலாவை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை அமமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலாவை தரக்குறைவாக பேசுவதா? நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு

கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா மரணத்தில் ஏதோ நடந்துள்ளது, அது தெரியாததால் தான் ஓபிஎஸ் ஆஜராகவில்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்றும் சசிகலாவால் அதிமுகவில் ஒரு சதவீதம் கூட பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே. ஊரடங்கை மீறி சாலையில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமமுகவினர், நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதோடு, அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களின் கையில் இருந்த நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை வாங்கியதுடன், அவர்களை அப்புறப்படுத்தினர்.