அமமுக நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை.. பெரம்பலூர் அருகே பரபரப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. முதலாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பெரம்பலூர் அருகே அமமுக நிர்வாகி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர், சங்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் அமமுக நிர்வாகி பாண்டி என்கிற வல்லத்தரசு. இவரும் இவரது நண்பர் சூர்யாவும் வெளியே சென்று கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த வல்லத்தரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், சூர்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெட்டி படுகொலை செய்யப்பட்ட வல்லத்தரசு அமமுக நகர மாணவரணி செயலாளராக இருந்து வந்தாராம். அதனால் அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை செய்து விட்டு தப்பியோடிய அந்த மர்ம நபர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.

Most Popular

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும்? – டி.டி.வி.தினகரன் கேள்வி

நீட் தேர்வுக்கு பயிற்சி கூட பெற முடியாத நிலையில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக...

சென்னையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 4,526 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்...

“இனி பிரபலங்களை பார்த்து பிரமிக்காதீர்கள் “-ஊடகத்தில் உலாவரும் போலி பின்தொடர்பவர்கள் (followers )-டாலர்களில் விற்கப்படும் போலிக்கணக்குகள் ..

சமூக ஊடகத்தளமான ட்விட்டர் ,பேஸ் புக் ,இன்ஸ்டாக்ராமில் பிரபலங்களை லட்சக்கணக்கானவர்கள் பின்தொடர்வதை பார்த்து நாம் பிரமித்து போயிருக்கிறோம் .ஆனால் அதில் பல போலி கணக்குகள் என்றும் ,லட்சக்கணக்கான டாலர்களை கொட்டிக்கொடுத்து வாங்கப்பட்டவை என்றும்...
Open

ttn

Close