முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்த ‘அமமுக’ பிரமுகர்!

 

முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்த ‘அமமுக’ பிரமுகர்!

முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர், அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று ரூபாய் 2 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்த ‘அமமுக’ பிரமுகர்!

இதற்கு முன்னதாக, திருச்சியில் இருந்து திருவாரூருக்கு காரில் முதல்வர் சென்று கொண்டிருந்த போது அவரது காண்வாய் மெதுவாக சென்றது. அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை அவரிடம் கொடுத்தனர். முதல்வரின் காண்வாய் வடுவூர் கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது ஓடிச்சென்ற அமமுக திருவாரூர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் இராவணன் முதல்வரிடம் மனு அளித்தார். அதை முதல்வர் பெற்றுக்கொண்டார்.

அந்த மனு குறித்து பேசிய அவர், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த வடுவூர் முதலில் நாகை பின்னர் திருவாரூர் மாவட்டம் இணைக்கப்பட்டது. ஆனால் எங்கள் ஊருக்கு 22 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் இருப்பதால் வடுகூர் கிராமத்தை தஞ்சாவூர் உடன் இணைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளேன். முதல்வர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம் என்று கூறினார். முதல்வரிடம் மனு அளித்த ராவணனின் மனைவி அமமுக மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.