21 தொகுதிகளில் அதிமுக வெற்றியை பறித்த அமமுக… சொல்லி அடித்த தினகரன்

 

21 தொகுதிகளில் அதிமுக வெற்றியை பறித்த அமமுக… சொல்லி அடித்த தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது 21 லட்சம் ஓட்டுகளை பெற்ற அவரது கட்சி இந்த தேர்தலில் 10.56 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக அமமுக – தேமுதிக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் கோவில்பட்டியில் தோல்வியை தழுவியுள்ளார். இருப்பினும்
அமமுக கட்சி வேட்பாளர்கள் அதிமுகவின் வாக்கு வங்கியை குறைத்துள்ளனர். தென்மாவட்டங்கள் மட்டுமல்லாது வடக்கு மாவட்டங்களிலும் அமமுக கட்சி அதிமுக வாக்கு வங்கியை சரித்துள்ளது.

21 தொகுதிகளில் அதிமுக வெற்றியை பறித்த அமமுக… சொல்லி அடித்த தினகரன்

அமமுக ஒருசில மாவட்டங்களில் அதிக வாக்குகளை குவித்து , அதிமுகவின் வாக்கு வங்கியை சரிய செய்துள்ளது. அமமுகவின் வேட்பாளர்கள், 12 திமுக வேட்பாளர்கள், 6 காங்கிரஸ் வேட்பாளர்கள், மதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளில் தலா ஒரு வேட்பாளர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.இந்த 21 தொகுதிகளில் 17 அதிமுக வேட்பாளர்கள் , 3 பாமக வேட்பாளர்கள், ஒரு பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளனர்.திருவாடனை, ஆண்டிபட்டி, பாபநாசம் ,தியாகராய நகர் ,சாத்தூர், தென்காசி ,உத்திரமேரூர், ராஜபாளையம் ,காரைக்குடி மற்றும் காட்பாடி ஆகிய தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது.இந்த தொகுதிகளில் அமமுக கடும் போட்டியை கொடுத்து அதிமுகவின் வாக்கு வங்கியை பிரித்துள்ளது.

21 தொகுதிகளில் அதிமுக வெற்றியை பறித்த அமமுக… சொல்லி அடித்த தினகரன்

முன்னதாக அதிமுக வெற்றி பெற சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள பாஜக பல்வேறு திட்டங்களை வகுத்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி கறார் காட்டிய நிலையில் சசிகலா தானாகவே அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார் . அதன் விளைவே அதிமுக தற்போது தோல்வியை சந்தித்துள்ளது என அமமுகவினர் கூறி வருகின்றனர்.