என் போட்டோவ மறச்சிட்டாங்க.. ‘அமமுக வேட்பாளர்’ தர்ணா!

 

என் போட்டோவ மறச்சிட்டாங்க.. ‘அமமுக வேட்பாளர்’ தர்ணா!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் கட்சி தொண்டர்களும் நடிகர், நடிகைகளும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

என் போட்டோவ மறச்சிட்டாங்க.. ‘அமமுக வேட்பாளர்’ தர்ணா!

காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குப்பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 20.23%, குறைந்தபட்சமாக நெல்லை தொகுதியில் 9.93% வாக்குப்பதிவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சேலம் ஆத்தூர் நடுநிலைப்பள்ளியில் அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது படம் மறைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.