‘8 போலீசாருக்கு கொரோனா’..அம்மாபேட்டை காவல்நிலையம் மூடல்!

 

‘8 போலீசாருக்கு கொரோனா’..அம்மாபேட்டை காவல்நிலையம் மூடல்!

தமிழகத்தில் கொரோனா பதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக முடங்கி இருக்கிறது. இந்த கொரோனா பாதிப்பு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தன் உயிரை பணையம் வைத்து, மக்களை காக்கும் பொருட்டு மிக சவாலான பணியில் கொரோனா தடுப்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர். நமக்காக இல்லை என்றாலும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் வீட்டிலேயே பத்திரமாக இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் எதையும் பொருட்படுத்தாது சுற்றித்திரியும் ஒரு சிலரால் காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என பலருக்கு கொரோனா பரவியது. அதில் ஒரு சிலர் உயிரிழக்கவும் நேர்ந்தது.

‘8 போலீசாருக்கு கொரோனா’..அம்மாபேட்டை காவல்நிலையம் மூடல்!

நேற்று காலை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்று, பல காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்பு பணிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தின் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றும் 8 போலீசாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.