‘அரசு’ உணவகமாக மாறிய ‘அம்மா’ உணவகம்!

 

‘அரசு’ உணவகமாக மாறிய ‘அம்மா’ உணவகம்!

சென்னை முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் சிலர் நுழைந்து அதன் பதாகைகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதிமுக முக்கியப் புள்ளிகள் இதனைப் பகிர்ந்து திமுகவினரைக் கடுமையாக விமர்சித்தனர்.

‘அரசு’ உணவகமாக மாறிய ‘அம்மா’ உணவகம்!

உடனடியாக இந்தத் தகவல் திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. அவர் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார். இதனை சைதை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு எதிராகப் பதிவிட்டவர்கள் பலரும் ஸ்டாலினின் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று மா.சுப்பிரமணியனின் ட்வீட்டுக்குள் ஒளிந்திருக்கிறது. ஆம் அம்மா உணவகத்தை அவர் எப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்று பாருங்கள். அம்மா உணவகம் ‘அரசு உணவகம்’ ஆக மாறியிருக்கிறது. இதை உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து சிலாகிக்கிறார்கள்.