அம்மா உணவகம் சூறை… திமுகவினர் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!

 

அம்மா உணவகம் சூறை… திமுகவினர்  2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!

அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அம்மா உணவகம் சூறை… திமுகவினர்  2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று காலை சென்ற திமுகவினர் சிலர் அங்கிருந்த பெயர்பலகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்த உணவுப் பொருட்களையும் அவர்கள் சேதம் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ காலையிலிருந்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மா உணவகம் சூறையாடும் வீடியோவில் ஒருவர் திமுக துண்டு அணிந்து இருந்த நிலையில் இணையத்தில் திமுக குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கின. அத்துடன் இது போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்…” என்று பதிவிட்டுள்ளார்.தவறு நடந்ததாக தெரியவந்த சில மணிநேரத்தில் புதியதாக ஆட்சியில் அமரவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது. இதை ட்விட்டரில் டேக் செய்துள்ள இயக்குநர் வெங்கட்பிரபு, மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.