• March
    31
    Tuesday

Main Area

Main



சென்னையில் வலம் வரும் 'அம்மா பேட்ரோல்' : இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?

அம்மா பேட்ரோல்
அம்மா பேட்ரோல்

சென்னை: குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அம்மா பெட்ரோல் ரோந்து வாகனம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அம்மா பேட்ரோல் ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்த இந்த ரோந்து வாகனம் சென்னையில் உள்ள 40 மகளிர் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

patrol

குழந்தைகளுக்கு 1098 என்ற உதவி எண்ணும், பெண்களுக்கு 1091 என்ற உதவி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆபத்துக் காலங்களில் இந்த இலவச சேவை எண்ணைத்  தொடர்பு கொள்வதன் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றச் சம்பவங்களை போலீசார் தடுப்பதுடன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். குறிப்பாக இந்த ரோந்து வாகனத்தில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி, ரேடியோ உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் உள்ளன. மேலும் ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு கான்ஸ்டபிள், ஒரு ஓட்டுநர் என மூன்று பேர் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

patrol

தற்போது சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது விரைவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.