கொரோனா இருக்கா? அப்ப வீட்டுலயே இருங்க… “அம்மா கோவிட் 19” திட்டம்!

 

கொரோனா இருக்கா? அப்ப வீட்டுலயே இருங்க… “அம்மா கோவிட் 19” திட்டம்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,063 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

கொரோனா இருக்கா? அப்ப வீட்டுலயே இருங்க… “அம்மா கோவிட் 19” திட்டம்!

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெறக்கூடிய அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் தமிழக சுகாதாரத்துறையால் நாளை தொடங்கப்பட உள்ளது. இதற்காக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Amma covid home care kit வழங்கப்படவுள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அந்த Amma covid home care kit- இல் Pulse oximeter, digital thermometer, mask, Sanitizer, கபசுர குடிநீர், உள்ளிட்டவை இருக்குமென கூறப்படுகிறது.