நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் பொடி – தேன்!

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் பொடி – தேன்!

மிக எளிதாகக் கிடைக்கும் நெல்லிக்காய் பொடி மற்றும் தேனை வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நெல்லிக்காயும் தேனும் எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் பொடி – தேன்!

தேவையானவை: நெல்லிக்காய் பொடி ஒரு டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன்.

நெல்லிக்காய் பொடியுடன் தேனைச் சேர்த்து நன்கு குழைத்துச் சாப்பிட வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். மேலும் நெல்லிக்காய் பொடியில் உள்ள சத்துக்கள் செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.

வைட்டமின் சி ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதன் காரணமாக நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றலை நம்முடைய உடல் பெறுகிறது. இது தவிர எலுமிச்சையில் இரும்புச் சத்து, கால்சியம் உள்ளிட்டவையும் உள்ளன. இவையும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையத் துணை செய்கின்றன.

தேனில் நார்ச்சத்து, கொழுப்பு, புரதம் ஆகியவை இல்லை. ஆனால் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் உள்ள உயர் தரமான ஆன்டி ஆக்ஸிண்ட்கள் இதய நோய், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

தொண்டையில் ஏற்படக் கூடிய தொற்றுகளுக்கு மிகச்சிறந்த நிவாரணத்தைத் தேன் அளிக்கிறது. சந்தையில் கிடைக்கும் இருமல் மருந்தைக் காட்டிலும் தேன் மிக விரைவாக நிவாரணம் வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேனுக்கு ஆன்டி பாக்டீரியல், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி கேன்சர் தன்மை உள்ளது. இதனால் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைக்க துணை செய்கிறது.