ரஜினிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

 

ரஜினிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறவிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல் ஹாசன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

ரஜினிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

இந்நிலையில் ரஜினிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “நடிகர் ரஜினிகாந்த் ஆளுமைமிக்கவர், அவரது நடிப்பதற்கு திறமைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களோடு நானும் இணைந்து தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்தை வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தாதாசாகேப் பால்கே விருதுப்பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.