மக்கள் சொல்லும்போது ராஜினாமா செய்கிறேன் – அமித்ஷா

 

மக்கள் சொல்லும்போது ராஜினாமா செய்கிறேன் – அமித்ஷா

மேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின, கூச் பிகார் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

மக்கள் சொல்லும்போது ராஜினாமா செய்கிறேன் – அமித்ஷா

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நான் ராஜினா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறிவருகிறார். மக்கள் சொல்லும்போது ராஜினாமா செய்கிறேன். ஆனால் மே. 2 ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தாவுக்கு மக்கள் சிறிய பிரியாவிடை கொடுத்தால் நன்றாக இருக்குமா? பாஜகவுக்கு 200 இடங்களை வழங்கி மம்தாவுக்கு மக்கள் பிரியா விடை கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.