உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் சிந்தனை – அமித்ஷா

 

உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் சிந்தனை – அமித்ஷா

விழுப்புரத்தில் சிங்காரவேலர் சிலைக்கு அடிக்கல் நாட்டி, உருவப்படத்தை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்

அதன்பின் அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. நாட்டின் தொன்மையான மொழி தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழில் பேச முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன். திருவள்ளுவரை பற்றிய அறியவும், தமிழில் பேசவும் விருப்பம் என பிரதமரும் தெரிவித்துள்ளார். தமிழ் மண்ணில் பிறந்த பல மகான்கள், உலகளவில் பெருமையை சேர்த்தவர்கள். மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் இல்லை என்ற ராகுல்காந்தி குற்றஞ்சாட்டுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய மீன்வளத்துறை உருவாக்கப்பட்டது, ராகுல்காந்தி அப்போது விடுமுறையில் இருந்தார். திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது ஊழல் நிறைந்தது. திமுக-காங்கிரஸ் கூட்டணி குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி என்பது மக்களுக்கான கூட்டணி.

உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் சிந்தனை – அமித்ஷா

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைவது உறுதி. தானாகவே அங்கு அரசு கவிழ்ந்துவிட்டது. காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போகும். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்துவிட்டனர். தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை நாட்டு மக்கள் அனைவரும் மதிக்கின்றனர். தமிழ் கலாச்சாரம் இன்றி இந்தியாவின் கலாச்சாரம் இல்லை. ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது குறித்து சோனியா காந்தியும், உதயநிதியை முதல்வராக்குவது குறித்து ஸ்டாலினும் சிந்தித்து வருகின்றனர்” என பேசினார்.