அதிமுகவிடம் 30க்கும் அதிகமான தொகுதிகளை கேட்டு தொல்லைக்கொடுக்கும் பாஜக!

 

அதிமுகவிடம் 30க்கும் அதிகமான தொகுதிகளை கேட்டு தொல்லைக்கொடுக்கும் பாஜக!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டிருக்கும் தேசிய கட்சியான பாஜக ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அண்மையில் கோவை வந்த பிரதமர் மோடி, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். அமித்ஷாவின் தமிழக வருகை அரசியல் ரீதியாக கவனத்தை பெற்றுள்ளது.

அதிமுகவிடம் 30க்கும் அதிகமான தொகுதிகளை கேட்டு தொல்லைக்கொடுக்கும் பாஜக!

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பாஜக தரப்பில் 30க்கும் அதிகமான தொகுதிகள் கேட்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி பங்கீடு குறித்து ஓபிஎஸ் , ஓபிஎஸ் உடன் இரவு 8. 30 மணிக்கு சந்திப்பை தொடங்கிய அமித்ஷா தற்போதுவரை பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.