அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

 

அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

இந்தியாவில் இஸ்ரேல் உளவு பார்த்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலிறுத்தியுள்ளார்.

அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

பெகாஸஸ் ஸ்பைவேர் என்ற உளவு பார்க்கும் நிறுவனம் மூலம் இந்தியாவில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் செல்போன், வாட்ஸ்அப் ஆகியவை உளவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.

அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

இந்நிலையில் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “இந்தியாவில் இஸ்ரேல் உளவு பார்த்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஒட்டுக்கேட்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீதிபதியை நியமித்து உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அழகிரி, “இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் இந்தியாவில் மட்டும் 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெகாஸஸ் ஸ்பைவேர் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் 37 தொலைப்பேசிகளில் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இதில் 10 இந்தியர்களின் தொலைப்பேசிகளும் அடங்கும்.பெகாஸஸ் என்ற மென்பொருள் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, உலகில் உள்ள அரசாங்கங்கள் மட்டுமே இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.