அமிதாப் பச்சனின் ‘கொரோனா காலர் டியூன்’ தொடரும்!

 

அமிதாப் பச்சனின் ‘கொரோனா காலர் டியூன்’ தொடரும்!

நடிகர் அமிதாப் பச்சனின் கொரோனா விழிப்புணர்வு ஆடியோவை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் குறித்த விழுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த விழிப்புணர்வு காலர் டியூன் கொண்டு வரப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியதால், அந்த காலர் டியூன் நீக்கப்பட்டு நடிகர் அமிதாப் பச்சன் குரலில் புதிய விழிப்புணர்வு காலர் டியூன் ஒலிக்கும் படி செய்யப்பட்டது. அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் நிலையில், அவரது குரல் கொண்ட காலர் டியூனையும் நீக்கக் கோரி டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராகேஷ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அமிதாப் பச்சனின் ‘கொரோனா காலர் டியூன்’ தொடரும்!

அந்த மனுவில், அமிதாப் பச்சன் பேசியதற்கு மத்திய அரசு பணம் கொடுக்கும். கொரோனா காலகட்டத்தின் போது பலர் நற்பணிகளை செய்தனர். பல வீரர்கள் இதற்காக பாடுபட்டனர். அவர்களை பயன்படுத்தி காலர் டியூன் பிரச்சாரம் செய்யலாம். அரசுக்கு பணம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீதியை நிலைநாட்டும் பொருட்டு அமிதாப்பின் காலர் டியூனை நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமிதாப் பச்சனின் கொரோனா விழுப்புணர்வுக்கு எதிரான இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கொரோனா விழுப்புணர்வு காலர் டியூன் தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.