பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி !

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 அமிதாப் பச்சன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினரும் ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். கடந்த பத்து நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு செல்லும் முன் வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு அறிவித்ததில் இருந்து அமிதாப் பச்சன் வீட்டில் தான் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் தான் டிவி ரியாலிட்டி ஷோவான குரோர்பதி நிகழ்ச்சிக்கான ப்ரொபஷனல் வீடியோ மற்றும் வேறு சில படங்களின் புரமோஷனுக்கு அமிதாப் பச்சன் வீட்டில் சூட்டிங் செய்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த புரோடக்சன் குழுவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்

அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...