ரஜினி குறித்து அமித் ஷா விசாரிப்பு : அதிமுக கூட்டணி உடைய வாய்ப்பு ; என்ன சொல்கிறார் குருமூர்த்தி

ரஜினி குறித்து அமித் ஷா விசாரிப்பு : அதிமுக கூட்டணி உடைய வாய்ப்பு ;  என்ன சொல்கிறார் குருமூர்த்தி

நடிகர் ரஜினிகாந்த் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ரஜினி குறித்து அமித் ஷா விசாரிப்பு : அதிமுக கூட்டணி உடைய வாய்ப்பு ;  என்ன சொல்கிறார் குருமூர்த்தி

இந்நிலையில் பிரபல தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தி, “கடந்த 25 வருடமாக தமிழகத்திற்கு சாபமான சூழல் ஏற்பட்டது. தற்போது ரஜினியின் அறிவிப்பு அதை மாற்றும் என நம்புகிறேன். ரஜினியை ஒரு நடிகராக யாரும் பார்க்கவில்லை. அவரை ஒரு நல்ல மனிதராகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். அதனால் ரஜினி – மோடி ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறுபடும் என்பது எனது நிலைப்பாடு.

ரஜினி குறித்து அமித் ஷா விசாரிப்பு : அதிமுக கூட்டணி உடைய வாய்ப்பு ;  என்ன சொல்கிறார் குருமூர்த்தி

இதே நிலைப்பாடு ரஜினிக்கும் உள்ளதா என்பது எனக்கு தெரியாது. ரஜினியின் அரசியல் வருகை உறுதிப்படுத்தி உள்ளதால் கூட்டணி கட்சிகளில் பல மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை ரஜினி தன்னை முதல்வர் வேட்பாளராகவே நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இரு பெரும் அரசியல் தலைவர்கள் இருந்தார்கள் அதனால் அவர்கள் கட்சி செய்யும் தவறுகள் தெரியாமலேயே போனது. தற்போது அவர்கள் இல்லை என்பதால் அரசியல் களத்தில் போட்டி நிலவுகிறது.

ரஜினி குறித்து அமித் ஷா விசாரிப்பு : அதிமுக கூட்டணி உடைய வாய்ப்பு ;  என்ன சொல்கிறார் குருமூர்த்தி

ரஜினிகாந்த் குறித்து அமித் ஷா என்னிடம் கேட்டார். ரஜினி முடிவு செய்தால் மட்டுமே எதையும் உறுதியாக சொல்ல முடியும் என்று நான் அவரிடம் கூறினேன். ரஜினிகாந்திடம் இதை தான் செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. அவர் என்னிடம் கருத்துக் கேட்டால் அதை தெரிவிப்பேன். இறுதியில் முடிவு உங்களது என்று சொல்லிவிடுவேன். இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் ரஜினியிடம் கூறினால் அவர் என்னை அழைக்க மாட்டார்” என்றார்.