எப்படி உள்ளார் அமித்ஷா… டெல்லி ஊடகங்கள் மவுனம் காப்பது ஏன்?

 

எப்படி உள்ளார் அமித்ஷா… டெல்லி ஊடகங்கள் மவுனம் காப்பது ஏன்?


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல் நிலை எப்படி உள்ளது என்று டெல்லி ஊடகங்கள் வாய் திறக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் வாசலில் அமர்ந்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் எதுவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல்நிலைப் பற்றி துண்டு செய்தியைக் கூட வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி உள்ளார் அமித்ஷா… டெல்லி ஊடகங்கள் மவுனம் காப்பது ஏன்?
Delhi Aiims


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு சில நாட்களில் அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பிறகு திடீர் சுவாசக்கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவரது உடல்நிலை எப்படி உள்ளது, எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.
பா.ஜ.க-வில் உள்ள அமித்ஷா ரசிகர்கள் அவரது உடல்நிலை பற்றிக்

எப்படி உள்ளார் அமித்ஷா… டெல்லி ஊடகங்கள் மவுனம் காப்பது ஏன்?
Amithshaw

கவலைப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும், அமித்ஷா பற்றி எந்த தகவலும் வெளியே கசியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆகஸ்ட் 27 (நேற்று) இரவு அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் வார்டில் மற்ற எல்லோரும் வெளியேற்றப்பட்டார்கள். அமைச்சரின் உடல்நிலைப் பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி கூட எழுப்ப தைரியம் இன்றி மக்கள் உள்ளனர் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. அமித்ஷா உடல் நலம் பற்றி ரகசியம் காக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது உடல்நிலைப் பற்றி உடனடியாக எய்ம்ஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.