அமித்ஷா பிறந்தநாள்: முதல்வர் பழனிசாமி, எல்.முருகன் வாழ்த்து!

 

அமித்ஷா பிறந்தநாள்: முதல்வர் பழனிசாமி, எல்.முருகன் வாழ்த்து!

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பிறந்தநாளையொட்டி முதல்வர் பழனிசாமி, எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், நாட்டிற்கே சேவை செய்யும் தங்களுக்கு வல்லமையை வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா பிறந்தநாள்: முதல்வர் பழனிசாமி, எல்.முருகன் வாழ்த்து!

அதே போல தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி. உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் பல ஆண்டுகளாக தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவைக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா பிறந்தநாள்: முதல்வர் பழனிசாமி, எல்.முருகன் வாழ்த்து!

மேலும் பாஜக துணை தலைவர் அண்ணாமலை, “நாட்டு பற்றே உயிர்மூச்சு, உள்ளத்திலே உறுதி, சிந்தனையிலே தெளிவு, காரியத்தில் கவனம், தைரியமே வாழ்க்கை என்று வாழும் அமித்ஷாஅவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.” என வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.