darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



தமிழகம் வருகிறார் அமித்ஷா

amittshaah
amittshaah

சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக வியூகம் அமைத்து வருகிறது. அதேபோல் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக - காங் - விசிக - மதிமுக - இடதுசாரிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. ஆனால் கூட்டணி குறித்து அதிமுகவோ, பாஜகவோ இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றன. அதேசமயம் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வர இருக்கும் அவர், ஈரோட்டில் நடைபெற உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்திலும், பிப்ரவரி 1-ம் தேதி சென்னையில் நடைபெறும் பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.