கேரளா வரும் அமித் ஷா… 3ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைப்போம்… பா.ஜ.க. நம்பிக்கை

 

கேரளா வரும் அமித் ஷா… 3ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைப்போம்… பா.ஜ.க. நம்பிக்கை

கேரளாவில் பா.ஜ.க.வின் விஜய யாத்திரையின் இறுதி கட்டத்தில் கலந்து கொள்வதற்காக மார்ச் முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்மாநிலத்துக்கு வருகிறார் என்று கேரள பா.ஜ.க. தகவல் தெரிவித்துள்ளது.

கேரளாவில், கம்யூனிஸ்ட் கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும்தான் இதுவரை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது அம்மநிலத்தில் இந்துத்துவா குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.. ஒரு இடத்தில் வென்றது. அதன் பிறகு அம்மாநிலத்தில் பா.ஜ.க.வின். செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சபரிமலை போராட்டம் உள்ளிட்டவை பா.ஜ.க.வின் செல்வாக்கை மேலும் உயர்த்தியது.

கேரளா வரும் அமித் ஷா… 3ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைப்போம்… பா.ஜ.க. நம்பிக்கை
இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி

அண்மையில் கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை பா.ஜ.க. வென்றது, இது அம்மாநிலத்தில் தாமரை மலர தொடங்கி விட்டது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களையும் சென்றடையும் நோக்கில் கடந்த 21ம் தேதியன்று பா.ஜ.க. விஜய யாத்திரை தொடங்கியது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையில் பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர்கள் வி.கே. சிங் உள்பட பல்வேறு அமைச்சர்கள் ஈடுப்பட்டு உள்ளனர்.

கேரளா வரும் அமித் ஷா… 3ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைப்போம்… பா.ஜ.க. நம்பிக்கை
அமித் ஷா

இந்நிலையில் விஜய யாத்திரையின் இறுதி கட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார். வரும் மார்ச் 7ம் தேதியன்று விஜய யாத்திரையில் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார். அமித் ஷா வருகை கேரள பா.ஜ.க. தொண்டர்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுக்கும் என அம்மாநில பா.ஜ.க. தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் கேரளாவில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்வார் என்று அம்மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சந்தீப் வச்சஸ்பதி தெரிவித்தார். மேலும், கேரள சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டியுடன் முதல் முறையாக மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்காக சட்டப்பேரவை தேர்தலில் கட்சி போட்டியிடுகிறது என தெரிவித்தார்.