“புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு அமித்ஷா மிரட்டல்”

 

“புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு அமித்ஷா மிரட்டல்”

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் நேரடியாக பேசி அமித்ஷா மிரட்டல்விடுத்தார் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

“புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு அமித்ஷா மிரட்டல்”

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசுக்கு எதிராக நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்த நிலையில், அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இந்த ஒட்டுமொத்த சதிவேலைக்கும் பாஜக தான் காரணம் என முதல்வர் நாராயணசாமி வெளிப்படையாகவே சட்டமன்றத்தில் பேசினார்.

“புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு அமித்ஷா மிரட்டல்”

இந்நிலையில்காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் , “புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஒழிக்க பாஜக முயற்சிக்கிறது. எதிர்வரும் தேர்தலில் ஆட்சியாளர்களை தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தூக்கி எறிவார்கள் ” என்று கூறியுள்ளார்.