• February
    22
    Saturday

Main Area

Main



டெல்லியில் நினைத்தது நடக்கலையே... புலம்பும் அமித்ஷா!

amit shah
amit shah

டெல்லியில் திட்டமிட்டது நடக்கவில்லை... அதனால் தான் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்தது குறித்து அமித்ஷாவிடம் கேட்டபோது, "டெல்லியில் நான் வகுத்த வியூகம் தவறாகிப் போனதுதான் பா.ஜ.க-வின் தோல்விக்கு காரணம். சி.ஏ.ஏ-வுக்கு எதிராக போராடுபவர்களைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று ஒரு சில தலைவர்கள் பேசியது தவறாகிவிட்டது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று விமர்சனம் செய்து எதிர்மறையாக மாறிவிட்டது. பா.ஜ.க தலைவர்களின் தவறான பிரசாரத்தால்தான் தோல்வியடைந்தோம்.

bjp


டெல்லி மக்கள் பா.ஜ.க-வை முற்றிலுமாக ஒதுக்கிவிடவில்லை. கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களைக் கொடுத்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லை. பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மத ரீதியான பாகுபாடு காட்டப்படும்போது அவர்களுக்கு உரிய அனுமதி, மரியாதை அளித்து இந்தியக் குடிமக்களாக்க வேண்டும் என்று காந்தியடிகளே கூறியுள்ளார்" என்றார்.

amit shah.jpg2


அமித்ஷா மிகப்பெரிய சாணக்கியன் என்ற வகையில் ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன. அவர் தலைவரான பிறகு நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் தேர்தல்களில் எல்லாம் பா.ஜ.க ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இருப்பினும் அமித்ஷா வியூகத்தால் பா.ஜ.க தொடர் வெற்றி பெற்று வருகிறது என்ற பில்ட்அப் மட்டும் தொடர்ந்து நடக்கிறது. தற்போது அவர் பா.ஜ.க தலைவராக இல்லாத நிலையிலும் கூட அமித்ஷாவை பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் கொண்டாடுவது தொடர்கிறது.

2018 TopTamilNews. All rights reserved.