சிவ சேனாவுக்கு முதல்வர் பதவி தருவதாக ஒருபோதும் வாக்குறுதி கொடுக்கவில்லை.. மவுனத்தை கலைத்த அமித் ஷா

 

சிவ சேனாவுக்கு முதல்வர் பதவி தருவதாக ஒருபோதும் வாக்குறுதி கொடுக்கவில்லை.. மவுனத்தை கலைத்த அமித் ஷா

சிவ சேனாவுக்கு முதல்வர் பதவி தருவதாக ஒரு போதும் பா.ஜ.க. வாக்குறுதி கொடுக்கவில்லை என்று அமித் ஷா தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: 2019 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு மகாராஷ்டிரா முதல்வர் பதவி கொடுப்பதாக சிவ சேனாவுக்கு பா.ஜ.க. வாக்குறுதி கொடுக்கவில்லை. என்னுடன் மற்றும் மோடிஜியுடனுடன் நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தீர்கள். தேவேந்திர பட்னாவிஸ்தான் எங்கள் தலைவர் மற்றும் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று நாங்கள் தெரிவித்தோம். அறையில் நாங்கள் வாக்குறுதி கொடுத்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல.

சிவ சேனாவுக்கு முதல்வர் பதவி தருவதாக ஒருபோதும் வாக்குறுதி கொடுக்கவில்லை.. மவுனத்தை கலைத்த அமித் ஷா
சிவ சேனா

வாக்குறுதி அளிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். உத்தவ் ஜி, உங்கள் வேட்பாளர்கள் அனைவரும் பேனர்களில் மோடி ஜியின் 2.5 மடங்கு பெரிய படத்துடன் பிரச்சாரம் செய்தனர் மற்றும் நீங்கள் அவரது பெயரில் வாக்குகள் கேட்டீர்கள். அதிகார பேராசையில் அவர் பாலாசாகேப்பின் அனைத்து கொள்கைகளையும் டாபி ஆற்றில் போட்டு விட்டு அதிகாரத்தை எடுத்துக் கொண்டார்.

சிவ சேனாவுக்கு முதல்வர் பதவி தருவதாக ஒருபோதும் வாக்குறுதி கொடுக்கவில்லை.. மவுனத்தை கலைத்த அமித் ஷா
சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார்

அவர்கள் பா.ஜ.க. சேனா கூட்டணிக்கு ஆதரவான (தேர்தலில் பெரும்பான்மை பலம்) புனிதமான ஆணையை மீறி, 3 கட்சி ஆட்டோரிக்ஷா அரசாங்கத்தை உருவாக்க ஒத்துழைத்தனர். அது ஒவ்வொரு அடியிலும் திணறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் பா.ஜ.க. 105 தொகுதிகளிலும், சிவ சேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், சிவ சேனா ஆட்சியில் பங்கு கேட்டது. ஆனால் பா.ஜ.க. மறுத்து விட்டது. இதனால் பா.ஜ.க.வுடனான கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டது. மேலும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.