2022ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு… அமித் ஷா தகவல்

2022ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு… அமித் ஷா தகவல்

2022ம் ஆண்டுக்குள் நம் நாட்டில் வீடுகள் இல்லாத குடும்பத்தினருக்கு வீடு வழங்கும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமித் ஷா தெரிவித்தார்.

குஜராத்தில் ஷிலாஜில் புதிதாக கட்டப்பட்ட 4 வழிச்சாலை திறப்பு விழா ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால் உலகம் ஆச்சரியத்துடன் இந்தியாவின் பொருளாதாரத்தில் வி சேப் வளர்ச்சியை பார்த்து கொண்டு இருக்கிறது.

2022ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு… அமித் ஷா தகவல்
மோடி, அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொண்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் முந்தைய 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதை காட்டிலும் அதிகமாகும். மெட்ரோ பாதைகள், புல்லட் ரயில் போன்ற திட்டங்களை அவர் பட்டியலிட்டார். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் கிராமம் அல்லது நகர்ப்புறமாக இருந்தாலும் நாட்டில் உள்கட்டமைப்பை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறது.

2022ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு… அமித் ஷா தகவல்
விடு

மோடி அரசாங்கம் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சராம் வழங்கியுள்ளது. சாலை இணைப்பு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வங்கி கணக்கு வழங்கியுள்ளது. நம் நாட்டில் சுமார் 10 கோடி குடும்பங்கள் அல்லது 30 கோடி மக்கள் தங்களுக்கு சொந்த வீடுகள் இல்லாமல் உள்ளனர். 2022ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும் 2022ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.