எல்லைகளின் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும்-ராகுல் கிண்டல்.. இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது குழந்தையின் விளையாட்டு அல்ல.. அமித் ஷா

எல்லைகளின் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும்-ராகுல் கிண்டல்.. இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது குழந்தையின் விளையாட்டு அல்ல.. அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் டெல்லியில் இருந்தபடியே இணைய ஊடகங்கள் வாயிலாக பீகாரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பிறகு வேறு எந்த நாட்டு பாதுகாப்பும் அதன் எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றால் அது இந்தியாதான் என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என தெரிவித்தார். இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

எல்லைகளின் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும்-ராகுல் கிண்டல்.. இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது குழந்தையின் விளையாட்டு அல்ல.. அமித் ஷா

ராகுல் காந்தி நேற்று இது தொடர்பாக டிவிட்டரில், எல்லைகளின் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒருவரின் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க இது நல்ல யோசனையாக ஷாவுக்கு இருக்கலாம் என கிண்டலாக பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் நடைபெற்ற ஆன்லைன் பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது:

எல்லைகளின் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும்-ராகுல் கிண்டல்.. இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது குழந்தையின் விளையாட்டு அல்ல.. அமித் ஷா

நமது காலத்திலும் உரி மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நேரத்தை வீணாக்கவில்லை. விமான தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் தண்டிக்கப்பட்டது. இந்தியாவின் எல்லைகளை ஆக்கிரமிப்பது குழந்தையின் விளையாட்டு இல்லை, நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை மொத்த உலகிற்கும் உணர்த்தியது. இவ்வாறு அவர் பேசினார்.