நந்திகிராமில் மம்தா பானர்ஜியை சுவேந்து தோற்கடிப்பார்.. அமித் ஷா நம்பிக்கை

 

நந்திகிராமில் மம்தா பானர்ஜியை சுவேந்து தோற்கடிப்பார்.. அமித் ஷா நம்பிக்கை

மேற்கு வங்கம் நந்திகிராமில் மம்தா பானர்ஜியை சுவேந்து ஆதிகாரி தோற்கடிப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்கு வங்கம் பூர்பா மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதி மீது அனைவரது பார்வையும் உள்ளது. இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக சுவேந்து ஆதிகாரியும், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் மோதுவதுதான் இதற்கு காரணம். மேற்கு வங்கத்தில் நாளை 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளில் நந்திகிராம் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

நந்திகிராமில் மம்தா பானர்ஜியை சுவேந்து தோற்கடிப்பார்.. அமித் ஷா நம்பிக்கை
ஊர்வலத்தில் அமித் ஷா, சுவேந்து ஆதிகாரி

பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று நந்திகிராமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரமாண்ட தேர்தல் பிரசார ஊர்வலத்தை நடத்தினார். இந்த ஊர்வலத்தில் லாரியின் மேற்பகுதியில் அமித் ஷாவும், சுவேந்து ஆதிகாரியும் நின்றபடி வந்தனர். ஜெய் ஸ்ரீ ராம், நரேந்திர மோடி ஜிந்தாபாத், அமித் ஷா ஜிந்தா பாத் என்று தொண்டர்கள் முழக்கமிட்டப்படி வந்தனர்.

நந்திகிராமில் மம்தா பானர்ஜியை சுவேந்து தோற்கடிப்பார்.. அமித் ஷா நம்பிக்கை
சுவேந்து ஆதிகாரி

தேர்தல் ஊர்வலம் முடிந்த பிறகு அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க.வுக்கு பெரும் ஆதரவு உள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவேந்து ஆதிகாரி வெற்றியாளராக வருவார் என்று உறுதியாக தெரிவித்தார். மம்தா பானர்ஜி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன், தவறினால் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று சுவேந்து ஆதிகாரி சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது.