தங்களது நலனில் அக்கறை காட்டுவது மோடியா அல்லது பத்ருதீனா?.. அசாம் மக்கள் முடிவு செய்ய முடியும்.. அமித் ஷா

 

தங்களது நலனில் அக்கறை காட்டுவது மோடியா அல்லது பத்ருதீனா?.. அசாம் மக்கள் முடிவு செய்ய முடியும்.. அமித் ஷா

தங்களது நலனில் அதிக அக்கறை காட்டுவது பிரதமர் மோடியா அல்லது பத்ருதீனா என்பதை அசாம் மக்கள் தீர்மானிக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

அசாமில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் மாநிலத்தை 15 ஆண்டுகளாக ஆண்டது மற்றும் மாநிலத்தின் பிரதிநிதியாக இருந்த ஒருவரை பிரதமராக கொண்டு இருந்தது, ஆனாலும் அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவது தொடர்பான பிரச்சினையை தீர்க்க எதுவும் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் எந்த அளவுக்கும் செல்ல முடியும்.

தங்களது நலனில் அக்கறை காட்டுவது மோடியா அல்லது பத்ருதீனா?.. அசாம் மக்கள் முடிவு செய்ய முடியும்.. அமித் ஷா
பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி அசாமில் பத்ருதீன் அஜ்மலின் ஏ.ஐ.யு.டி.எப்., கேரளாவில் முஸ்லிம் லீக் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ளது. அஜ்மலின் கைகளில் அசாம் பாதுகாப்பாக இருக்க முடியாது. தங்களின் நலம் குறித்து அதிக அக்கறை காட்டுவது பிரதமர் மோடியா அல்லது பத்ருதீன் அஜ்மலா என்பதை அசாம் மக்கள் முடிவு செய்யலாம். பா.ஜ.க. கடந்த 5 ஆண்டுகளில், காசிரங்கா தேசிய பூங்கா, மத அமைப்புகளின் நிலங்களை ஆக்கிரமித்து இருந்த ஊடுவருவல்காரர்களை வெற்றிகரமாக வெளியேற்றியது.

தங்களது நலனில் அக்கறை காட்டுவது மோடியா அல்லது பத்ருதீனா?.. அசாம் மக்கள் முடிவு செய்ய முடியும்.. அமித் ஷா
பத்ருதீன் அஜ்மல்

5 ஆண்டுகளுக்கு முன் நான் பா.ஜ.க.வின் தேசிய தலைவராக இருந்தபோது, போராட்டம் இல்லாத, தீவிரவாதம் இல்லாத அசாமை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தோம். நாங்கள் எங்களது வாக்குறுதியை நிறைவேற்றினோம். எந்தவொரு கிளர்ச்சி அல்லது தீவிரவாதம் மாநிலத்தில் இல்லை. அமைதி மற்றும் வளர்ச்சியை அசாம் அனுபவதித்து வருகிறது. மேலும் 5 ஆண்டுகள் எங்களுக்கு தாருங்கள் ஊடுருவல் பிரச்சினையை தீர்க்க முடியும். தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலையை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். அசாமில் வெள்ளத்தை கட்டுப்படுத்த பா.ஜ.க. அரசு ஒரு மூலோபாயத்தை வகுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.