ஏழைகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை மம்தா அரசால் தடுக்கப்பட்டுள்ளது.. அமித் ஷா குற்றச்சாட்டு

ஏழைகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை மம்தா அரசால் தடுக்கப்பட்டுள்ளது.. அமித் ஷா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் ஏழை மற்றும் பழங்குடியினருக்கான மத்திய அரசின் 80க்கும் மேற்பட்ட திட்டங்களின் நன்மைகள் மம்தா அரசாங்கத்தால் தடுக்கப்பட்டுள்ளன என அமித் ஷா குற்றம் சாட்டினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். அமித் ஷா நேற்று பாங்குராவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஏழை மற்றும் பழங்குடியினருக்கான மத்திய அரசின் 80க்கும் மேற்பட்ட திட்டங்களின் நன்மைகள் மம்தா அரசாங்கத்தால் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளால் பா.ஜ.க.வை. நிறுத்த முடியும் என்று மம்தா பானர்ஜி நினைத்தால் அது அவரது தவறான கருத்து என்று அவரிடம் கூறி விரும்புகிறேன்.

ஏழைகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை மம்தா அரசால் தடுக்கப்பட்டுள்ளது.. அமித் ஷா குற்றச்சாட்டு
அமித் ஷா

எதிர்வரும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும். மம்தா பானர்ஜி அரசு மீது மக்களுக்கு மிகுந்த கோபம் உள்ளது. மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. மேற்கு வங்கத்தின் ஏழை மக்களுக்கு மத்திய அரசு உறுதியளித்துள்ள உதவிகள் அவர்களை சென்று சேரவில்லை. பழங்குடியினர் பகுதிகளிலும் இதுதான் நிலைமை.

ஏழைகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை மம்தா அரசால் தடுக்கப்பட்டுள்ளது.. அமித் ஷா குற்றச்சாட்டு
விவசாயிகள்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ சேவைகள் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 கிடைப்பதில்லை. வங்காள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநிலத்தில் பா.ஜ.க. அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.