70 ஆண்டுகளாக தொட பயந்த பிரச்சினைகளை மோடி அரசு தீர்த்தது.. ஆன்லைன் கூட்டத்தல் அமித் ஷா தகவல்…

பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா டெல்லியில் இருந்தபடியே இணைய ஊடகங்கள் வாயிலாக பீகாரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் ஆண்டில் கடந்த 70 ஆண்டுகளாக யாரும் தொடுவதற்கு பயந்த பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

மோடிஜி குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு அகதிகளுக்கு குடியுரிமை மற்றும் மரியாதை வழங்கும். இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை சர்வதேச ஏற்றுக்கொள்ளலை பெற்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பிறகு வேறு எந்த நாட்டு பாதுகாப்பும் அதன் எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றால் அது இந்தியாதான் என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு கூட்டம் (கோப்பு படம்)

யார் வேண்டுமானாலும் நம் எல்லைக்குள் நுழையலாம், நமது வீரர்களின் தலை துண்டிக்கலாம் மற்றும் டெல்லியின் தர்பார் பாதிக்கப்படாமல் ஒரு காலம் இருந்தது. உரி மற்றும் புல்வாமா நடந்து நமது காலத்தில். அது மோடி மற்றும் பா.ஜ.க. அரசு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 3ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Most Popular

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...

தனது சிந்தனைகளுக்கு ஒத்து வராத அரசாங்களை கலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கை… சிவ சேனா தாக்கு..

பா.ஜ.க.வின் முன்னாள் நட்பு கட்சியான சிவ சேனா தற்போது பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், அடுத்த மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே...
Do NOT follow this link or you will be banned from the site!