இந்த நாட்டில் பிறந்தவன், இந்த நிலத்தில் சாம்பலாக மாறுவேன்.. நானா வெளியாள்? மம்தாவுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா

இந்த நாட்டில் பிறந்தவன், இந்த நிலத்தில் சாம்பலாக மாறுவேன்.. நானா வெளியாள்? மம்தாவுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா

நான் இந்த நாட்டில் பிறந்தவன், இந்த நிலத்தில் சாம்பலாக மாறுவேன், அப்படியானால் நான் எப்படி வெளியாளாக இருக்க முடியும் என மம்தாவுக்கு அமித் ஷா பதிலடி கொடுத்தார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரசாரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்களை வெளியாட்கள் என்று அடிக்கடி கூறிவருகிறார். மம்தாவின் இந்த பேச்சுக்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தூர்ஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

இந்த நாட்டில் பிறந்தவன், இந்த நிலத்தில் சாம்பலாக மாறுவேன்.. நானா வெளியாள்? மம்தாவுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா
மம்தா பானர்ஜி

இந்த கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: நான் வெளியாளா? நான் இந்த நாட்டின் குடிமகன் இல்லையா? இந்த நாட்டின் பிரதமரை வெளியாள் என்று சகோதரி குறிப்பிடுகிறார். மம்தா பானர்ஜியின் அறிவு மிக குறைவு. யார் வெளியாள் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன் சகோதரி. கம்யூனிஸ்டுகள் தங்கள் சித்தாந்தத்தை சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர்.

இந்த நாட்டில் பிறந்தவன், இந்த நிலத்தில் சாம்பலாக மாறுவேன்.. நானா வெளியாள்? மம்தாவுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா
இடதுசாரி-காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் தலைமையும் வெளியே இருந்து வந்ததுதான், அது இத்தாலியிலிருந்து வந்தது. திரிணாமுல் காங்கிரசின் வாக்கு வங்கி வெளியே இருந்து வந்ததுதான். சட்டவிரோதமாக குடியேறியவர்கள்தான் அவர்களது வாக்கு வங்கி. நான் இந்த நாட்டில் பிறந்தவன். இந்த நிலத்தில்தான் சாம்பலாக மாறுவேன். அப்படியானால் நான் எப்படி வெளியாளாக இருக்க முடியும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.