இது தொடக்கம்தான்… தேர்தல் வரும் போது நீங்க தனியாகத்தான் இருப்பீங்க… மம்தாவை அலற விட்ட அமித் ஷா

இது தொடக்கம்தான்… தேர்தல் வரும் போது நீங்க தனியாகத்தான் இருப்பீங்க… மம்தாவை அலற விட்ட அமித் ஷா

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க.வில் சேருவதை குறிப்பிட்டு, தேர்தல் வரும் போது நீங்க தனியாகத்தான் இருப்பீங்க என்று மம்தாவை அமித் ஷா எச்சரிக்கை செய்தார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மிட்னாபூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அமித் ஷா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகிய சுவேந்து ஆதிகாரியும், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இது தொடக்கம்தான்… தேர்தல் வரும் போது நீங்க தனியாகத்தான் இருப்பீங்க… மம்தாவை அலற விட்ட அமித் ஷா
மம்தா பானர்ஜி

அந்த கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: ஏன் பலர் திரிணாமுல் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார்கள்? மம்தா பானர்ஜியின் தவறான, ஊழல் மற்றும் குடும்ப அரசியல் காரணமாக வெளியேறுகிறார்கள். இது ஒரு ஆரம்பம். தேர்தல்கள் வரும்போது நீங்கள் (மம்தா பானர்ஜி) நீங்கள் தனிமையில் விடப்படுவீர்கள். மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன்.

இது தொடக்கம்தான்… தேர்தல் வரும் போது நீங்க தனியாகத்தான் இருப்பீங்க… மம்தாவை அலற விட்ட அமித் ஷா
ஜே.பி. நட்டா

திரிணாமுல் காங்கிரசின் அரசியல் வன்முறையும், மிரட்டலும் எந்த நன்மையும் தராது. பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்டது. எங்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டனர். நீங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) எவ்வளவு வன்முறைகளை செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு பா.ஜ.க. வலுவாக எழும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.